தாய் இறந்த துக்கம்... ஐடி இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

 
தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே, சில வாரங்களுக்கு முன்பு தாய் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல், தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற விஜி (25). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த வேலாயுதம், தனது தாய் அமுதவள்ளியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 9-ஆம் தேதி அமுதவள்ளியும் உயிரிழந்தார். தாய் இறந்த துக்கத்தில் இருந்த வேலாயுதம், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசாமல் மன வருத்தத்துடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

நேற்று (சனிக்கிழமை) காலையில் வேலாயுதத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் உள்ளே பார்த்தபோது, வேலாயுதம் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலையில் தூக்கிட்டு தற்கொலை

முதற்கட்ட விசாரணையில், தாயார் இறந்த சோகத்தில் இருந்த வேலாயுதம் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!