மகன் இறந்த துக்கம்.. ஓராண்டுக்கு பின் தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

 
நீரில் மூழ்கி பலி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சினேகா தேவ். அவரது மனைவி ஸ்ரீலதா. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரே மகன் ஸ்ரீதேவ், கடந்த ஆண்டு விபத்தில் இறந்தார். ஒரே மகனின் மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், மகன் இறந்ததிலிருந்து இருவரும் கவலையில் இருந்தனர். மகன் இல்லாத உலகில் வாழ விரும்பாமல், தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

நீரில் மூழ்குதல்

அதன்படி, கணவன்-மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாற்றுக்குச் சென்றனர். பின்னர் கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்தனர். அதன் பிறகு, இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். கணவன்-மனைவியின் உடல்கள் ஆற்றில் கிடப்பதைக் கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸ்

கணவன்-மனைவியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கணவன்-மனைவி எழுதிய உருக்கமான கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், மகனை இழந்த துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக எழுதி இருந்தனர். சினேகா தேவின் உடலில் அவர்களின் மகனின் பெல்ட்டும் காணப்பட்டது. மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web