மாணவர்களுக்கு குட் நியூஸ்... பள்ளிகளில் மாதத்தின் 2 வது வாரத்தில் திரைப்படங்கள்!

 
திரைப்படங்கள்

 தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   அந்த வகையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாழும் சூழலை உணர்த்தும் வகையில், மாதத்தின் 2 வது வாரத்தில் கல்விசார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வகுப்பறைகள்


இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு வகையான கலாச்சார தனித்தன்மையை அறிந்து கொள்ளவும், வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளவும் உதவும். அத்துடன்  பாலின சமத்துவத்தை அறிந்து கொள்ளவும், நட்பு பாராட்டவும், குழுவாக இணைந்து செயல்படவும் இத்திரைப்படங்கள் வழிவகை செய்யும்.  திரைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு கதை எழுதுதல், பாடல் எழுதுதல், நடிப்பு, தயாரிப்பு, கேமரா, எடிட்டிங் போன்ற  திறமைகளை வளர்ப்பதற்காக கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திரைப்படங்கள் திரையிட கட்டுப்பாடுகள்  
 மாதத்தின் முதல்வாரமே திரையிடப்போகும் கல்விசார் திரைப்படங்களை  EMIS தளத்தில் இருந்து தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.
எமிஸ் தளத்தில் இருந்து மட்டுமே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து   திரையிட வேண்டும்.
பள்ளிகளில் இதற்காக ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்ய வேண்டும்.
திரைப்படங்களை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, DVD அல்லது பென்டிரைவ் மூலம் சேமித்து வைக்க ஏண்டும்.  Hi-Tech Lab/TV/Projector/Smart Board மூலம் மாணவர்களுக்கு திரைப்படங்களை திரையிட்டு  காட்ட வேண்டும்.

வகுப்பறைகள்
மாணவர்களுக்கு திரையிடப்படும் முன்னரே, தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் அந்த திரைப்படத்தை பார்த்து, படத்தின் தலைப்பை பள்ளி வளாகத்தின் சுவரொட்டியில் ஒட்டி வைக்க வேண்டியது அவசியம்.  அதே போல் குறிப்பிட்ட  திரைப்படங்களை பற்றி எடுத்துரைக்க, ஆர்வமுள்ள துறைசார் வல்லுநரை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்ற செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web