இன்று மதுரை வருகிறார் தோனி... புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு!
இன்று மதுரையில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறக்க உள்ளார்.
வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஒத்துழைப்பில் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகே 11½ ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டு, சர்வதேச தரத்திலான வசதிகள் கொண்டுள்ளது. இதில் பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் ஆகியவை உள்ளன. மழை பெய்தாலும் தண்ணீர் விரைவாக வெளியேற வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்டேடியத்தில் 20,000 ரசிகர்கள் அமர்வதற்கான கேலரி திட்டமிடப்பட்டுள்ளது, முதற்கட்டமாக 7,300 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தை கண்காணிக்க 197 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஸ்டேடியம் எதிர்காலத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை நடத்தும் இடமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
