மும்பை தீ விபத்து..! மாடியில் இருந்து குதிக்கும் பயங்கரம் ! வைரலாகும் வீடியோ!

 
மும்பை தீ விபத்து..! மாடியில் இருந்து குதிக்கும் பயங்கரம் ! வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது அவிக்னா பூங்கா. இந்த பூங்கா கர்ரே சாலையில் உள்ளது. 61 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் உள்ள 19வது மாடியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் எழுந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், கட்டடத்துக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் சிக்கியவர்கள், சேத விபங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பின் ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web