சொந்த அண்ணன் வீட்டில் கைவரிசை.. கோடிக்கணக்கில் ஆட்டைய போட்ட தம்பி உள்ளிட்ட 12பேர் கைது!
ஹைதராபாத்தில் உள்ள தோமல்குடா பகுதியைச் சேர்ந்தவர் இந்திரஜித் கோசாய். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் அதிகப்படியான ஆடம்பரத்தை விரும்புகிறார் என்பதும் அறியப்படுகிறது. இந்திரஜித் தனது ஆடம்பரத்திற்காக ஊதாரித்தனமாக செலவு செய்து தனது தொழிலில் பணத்தை இழந்துள்ளார்.
அதே சமயம் அண்ணன் தொழிலில் லாபம் கிடைத்ததால் மிகவும் வசதியாக இருந்துள்ளார். இது இந்திரஜித்துக்கு பிடிக்கவில்லை. இதனால் அண்ணன் மீது பொறாமை ஏற்பட்டு பகையை வளர்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அண்ணன் மீது கொண்ட பொறாமையால் அவன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். சம்பவத்தன்று இந்திரஜித் தனது சகோதரர் வீட்டிற்குள் கோடாரி, கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் 11 பேர் கொண்ட கும்பலுடன் நுழைந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ. 2.9 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்திரஜித்தின் சகோதரர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணைக்குப் பிறகு, சகோதரர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொள்ளைச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்திரஜித் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், மத்திய மண்டல அதிரடிப் படையினருடன் இணைந்து, முக்கிய குற்றவாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திரஜித் கோராய் உள்ளிட்ட 12 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் கொள்ளையடித்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பித்தளை பொருட்கள், பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!