எங்க அப்பா என்ன அடிக்கிறார், திட்டுறார்.. உடனே அவர கைது பண்ணுங்க.. காவல் நிலையத்தை அலற விட்ட 5 வயது சிறுவன்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், தந்தை தன்னை திட்டுவதாகவும், அடிப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பக்கனேர் காவல் நிலையத்தில் சிறுவன் இந்த புகார் செய்துள்ளார்.
இதைக்கேட்டு போலீசார் சிரித்தனர். இருப்பினும் பொறுமையாக சிறுவனிடம் இதுபற்றி கேட்டனர். உங்கள் தந்தை என்ன தவறு செய்தார்? அவர் ஏன் உன்னை அடித்தார்? என்று கேட்டனர். அதற்கு அந்த சிறுவன், "வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் செல்லக்கூடாது. ஆறு, கால்வாய் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்று ரூல்ஸ் போடுகிறார் அதனால் உடனே பிடித்து சிறையில் தள்ளுங்கள்" என்று சிறுவன் கடும் கோபத்துடன் கூறினான்.
அதன் பிறகு போலீசார் சோதனை செய்து, உங்கள் தந்தை மீது நடவடிக்கை எடுப்பேன். வீட்டுக்குப் போகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 5 வயது சிறுவனின் தந்தை அக்பால் என்பது தெரியவந்தது. அக்பால் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அங்கு இல்லை. ஆனால், விசாரணையில், ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்றும், சாலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் தனது மகனுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!