நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து.. இவர் தான் முக்கிய காரணம்.. போட்டுடைத்த பெண் அமைச்சர்!
திரைப்பட நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில நலத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா ஒருங்கிணைந்த மேடக் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் துப்பாக்கத்தில் கல்யாண லட்சுமி, ஷாதி முபாரக் திருமண நிதியுதவி திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கோண்டா சுரேகா கலந்து கொண்டார். மேடக் பாஜக எம்பி ரகுநந்தன் ராவ் அவரது கழுத்தில் மாலை அணிவித்து வரவேற்றார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த ட்ரோல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் கோண்டா சுரேகா, சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக பிஆர்எஸ் அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றனர் தெரிவித்தார்.
ஐதராபாத் காந்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, “கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல ஹீரோயின்களின் வாழ்க்கையில் கே.டி.ஆர் விளையாடியுள்ளார். அவர்தான் ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கினார். நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா விவாகரத்துக்கு கே.டி.ஆரால் தான் காரணம். பல நடிகர் நடிகைகள் போன்களை ஒட்டுக்கேட்டு மிரட்டி வந்துள்ளார். பெண்களை கேவலமாக பார்க்கிறார் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் கொண்டா சுரேகா.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!