அதிகாலை முதல் பரபரப்பு... நாகை , மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. சோதனை!
பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டில் திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நாகை மாவட்ட தலைவர் ரபீக் என்பவரின் வீட்டில் நான்கு பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு துப்பாக்கி ஏந்திய மூன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலும் இரு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வடகரையை சேர்ந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாலை முதல் தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!