நயினார் நாகேந்திரன் மதுரையில் 12ம் தேதி சுற்றுப்பயணம் தொடக்கம்... நிபந்தனைகளுடன் அனுமதி!

 
நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் மதுரையில் இருந்து வரும் 12ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா, சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

வரும் 12ம் தேதி மதுரையில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறார். இதை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். மதுரையை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கிறார்.

இந்நிலையில் மதுரையில் சுற்றுப்பயண தொடக்க விழாவுக்கு அனுமதிகோரி, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மனு அளித்தார். அந்த மனுவில், கோ.புதூர் பேருந்து நிலையம், பழங்காநத்தம், சிம்மக்கல், அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி தருமாறு கேட்டு இருந்தார்.

 நயினார் நாகேந்திரன்

இதையடுத்து அண்ணா நகர் அம்பிகா திரையரங்கு சந்திப்பில் பிரசாரம் பயண தொடக்க விழாவை நடத்த மாநகர் போலீசார் அனுமதி அளித்தனர். மேலும், பிரசார பயணத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை பா.ஜனதாவுக்கு விதித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?