திமுக ஊழல்களை கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே கண்ணீர் வந்து விடும்... நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தங்கள் மூலம் ₹1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். 7.5% முதல் 10% வரை லஞ்சம் உறவினர்கள் வழியாக பெறப்பட்டதாகவும், இதே துறையில் அரசு வேலை விற்றதில் ₹888 கோடி ஊழல் நடந்த செய்தி வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில், புதிய முறைகேடு அம்பலமானதாகவும் கூறினார்.

குடிநீர் வழங்கல் துறையில் மட்டும் ₹1,908 கோடி ஊழல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ₹160 கோடி, தோட்டக்கலைத் துறையில் ₹141 கோடி, சென்னை மாநகராட்சியில் கழிவறை பராமரிப்பில் ₹364 கோடி என நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த ஊழல் பட்டியல் நீளுகிறது என்று குற்றம் சாட்டினார். இத்தனை ஊழல்களை கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே கண்ணீர் வரும் நிலை என்றார்.

மக்களின் வரிப்பணத்தை நாலாப்பக்கமும் சுரண்டி, ஊழல் உடன்பிறப்புகளை ஒய்யாரமாக உலவவிடுவதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
