நாசா சாதனை... சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் பார்க்கர் விண்கலம்!

 
பார்க்கர்

விண்வெளியில் தொடர் ஆராய்ச்சிகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டு சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் விண்கலத்தை அமெரிக்கா அனுப்பியிருந்தது. இந்த விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் சூரியனை கடக்கவிருக்கிறது.வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிவந்து ஆய்வு செய்வதற்காக பாா்க்க விண்கலம்  விண்ணில் செலுத்தப்பட்டது.

பார்க்கர்
இன்று  புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.23 மணிக்கு) சூரியனை பாா்க்கா் விண்கலம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது.  சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த விண்கலம் கடக்கும் என்றாலும், மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கர்
இதனையடுத்து சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல உண்மைகளை அந்த விண்கலத்தின் மூலம் அறிவதற்கான வாய்ப்பு   ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.  பாா்க்கா் விண்கலம் சூரியனைக் கடக்கும்போது 1,700 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதன் வெப்பம் அதிகரிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதன் உள்பாகங்கள் சாதாரண அறை வெப்பத்தில் இருக்கும் அளவுக்கு காா்பன் கலவைப் பொருள் மூலம் அந்த விண்கலத்தின் மேல்பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web