நவபஞ்சம யோகம்... இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப் போகுது... சுப செலவுகளா மாத்திக்கோங்க!
காலமும் நேரமும் உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பார்கள். இந்த 3 ராசிக்காரர்கள் கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடாதீங்க. நவபஞ்சமி யோகத்தால உங்களுக்கு பணமழைக் கொட்டப் போகுது. செல்வம் அதிகமாக சேரும் இந்த காலத்துல வருகிற வருவாயை சுப செலவுகளா மாத்திக்கோங்க.
இந்த ஐப்பசி மாதத்தில் சுக்கிரனுக்கு சொந்தமான ராசி துலாம் ராசிக்கு சூரிய பகவான் நகர்ந்துள்ளார். இதன் பிறகு சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். துலாம் சூரியனின் தாழ்ந்த ராசியாக கருதப்படுவதால், ஜோதிடத்தில் இந்த பயணம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படவில்லை.
அக்டோபர் 17 ம் தேதியன்று துலாம் ராசிக்குள் நுழைந்த சூரியன் அடுத்த இடத்தில் இருக்கும் சனி பகவான் ஆகியவற்றின் தாக்கத்தால், இரண்டு கிரகங்களும் இணைந்து ‘நவ பஞ்சம யோகம்’ உண்டாகிறது. இந்த சூரியப் பெயர்ச்சியால் அடுத்த மாதம் வரை, நவபஞ்சம யோகம் நீடிக்கிறது. இந்த நவபஞ்சம யோகத்தால் அதிக நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம்:
நவ பஞ்சம யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அற்புதமான பலன்களை பெறுவார்கள். புதிய முயற்சிகளில் இந்த ராசியினர் எடுக்கும் முன்னெடுப்புகளும் லாபகரமாக இருக்கும். பணப்பிரச்னைகள், கடன் தொல்லைகள் ஆகியவைக் குறைந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பாராட்டுக்களை பெறும் வாய்ப்பு உருவாகும். கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம்:
நவ பஞ்சம யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். இந்தக் காலத்தில் கெட்டது விலகி ஓடும். ரிஷப ராசியினருக்கு தொட்டது துலங்கும். எதிரிகளின் தொல்லை இந்தக் காலத்தில் குறையும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி சுமுகமாக இருக்கும். கடன் பிரச்னைகள் நீங்கும். அமைதியும் நிம்மதியும் நிலவும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் நவ பஞ்சம யோகத்தால் அற்புதமான பலன்களை பெறப் போகின்றனர். துலாம் ராசியில் நுழைந்த சூரியனால், மனக்குழப்பங்கள் மறைந்து பணிகளில் உத்வேகம் பிறக்கும். தொழிலில் லாபம் பெருகும். செய்யும் ஒவ்வொரு செயலிலும் மன நிறைவினைப் பெறுவார்கள். உடல்நலனில் அக்கறை அதிகரிக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!