நயன்தாராவின் திருமண வீடியோ ட்ரைலர் வெளியீடு...!

 
நயன் தாரா

 தமிழ் சினிமாவின்  லேடி சூப்பர் ஸ்டார் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக  நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வ வீடியோக்கள்  எதுவும் வெளியாகவில்லை.விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை, ’பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.அந்த வீடியோவின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

 நவம்பர் 18ம் தேதி முழுமையனா படம் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ட்ரைலர் யு/ஏ சான்றிதழுடன் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதே நேரத்தில் 13 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக் கூடாதென நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட ஆவண வீடியோவாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web