குட் நியூஸ்...வீடு வாங்குபவர்களுக்கு வருமானவரிச்சலுகை... பட்ஜெட்டில் வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு!

 
வீடு


இன்று பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்   காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெருகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வீடு வாங்குபவர்களுக்கு  வரிச்சலுகைகள் அளிக்கப்படும் எனவும், வீட்டுக் கடனுக்கான வட்டி விலக்கும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. நடப்பாண்டின்  முதல் கூட்டத் தொடர் ஆகையால் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.  

பட்ஜெட்

மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2019 ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரை தொடர்ந்து 5வது முறை முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 வது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதையடுத்து பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் பாராளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பு செய்யும் சன்சத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  நேற்று பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்
ஏற்கனவே 7 லட்சம் ஆக இருக்கும் தனி நபர் வருமான வரி விலக்கு 10 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், மீதான கலால் வரி, மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் கருவிகளுக்கான இறக்குமதி வரி, தங்கம், வெள்ளி, வைரம் இறக்குமதி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நிதி உதவி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ 6000 வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ 12000 ஆக அதிகரிக்கப்படலாம் என  பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மே ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள ஒரு நிலையில் அது ரூ10000ஆக  உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெரு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது பெருநகரங்களில்  ரூ45 லட்சம் ரூபாய் வரை வீடுகள் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு ஒரு நிலையில் தற்போது அது ரூ 70 லட்சம்  ஆக  உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. சிறிய நகரங்களில் 5 லட்சம் வரை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக் கடனுக்காக வட்டிக்கு ஒரு நிதியாண்டில் 2 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில் அது 5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web