பணத்தேவை.. நண்பரின் மகனை கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 12 வயது மகனைக் காணவில்லை என குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தந்தையின் நண்பரான சச்சின் மீனா மீது சந்தேகம் எழுந்தது, அவரை போலீசார் தொடர்பு கொண்டபோது, சென்னையில் இருப்பதாக பொய்யாக கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து விசாரணையில் மீனா ஜெய்ப்பூர் அருகே ஆக்ரா சாலையில் இருப்பது தெரியவந்தது.
இந்த தகவலின் பேரில் போலீசார் அவரது மொபைல் சிக்னலை ட்ரேஸ் செய்து மீனா இருக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு பூட்டிய அறையில் சிறுவன் பூட்டியிருப்பதை கண்டனர். மேலும், கடத்தப்பட்ட சிறுவனின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தன. போலீசார் சிறுவனை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். மீனா மற்றும் அவரது கூட்டாளி அசோக் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில், மீனாவுக்கு பணப் பிரச்னை இருந்து வந்ததும், கடனை அடைக்கும் முயற்சியில், தன் நண்பரின் மகனைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது விசாரணையில் உள்ளனர் மற்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து செயல்பட்டு 6 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். சிறுவனின் பெற்றோர் கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். பணத்திற்காக நண்பர் குழந்தையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!