பக்கத்து வீட்டுக்காரரிடம் முன்விரோதம்.. ஆத்திரத்தில் கூலித்தொழிலாளி படுகொலை!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நாராயணபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜசேகருக்கும், விநாயகமூர்த்தி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் வைர பிரகாசம், விக்ரம் ஆகியோர் அவரை கொடூரமாக வெட்டியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் வைர பிரகாசம், விக்ரம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!