பழிக்குப்பழி... நடுரோட்டில் தலையை சிதைத்து கொடூரமாக கொன்ற மர்ம நபர்கள்!

 
முகமது

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முகமது இர்பான் (24). இவருடைய நண்பர்கள் முகமது அப்துல்லா (25), முகமது மீரான் (23). 

நேற்றிரவு திண்டுக்கல் பகுதியில் மழை விட்டு விட்டுப் பெய்துக் கொண்டிருந்த நிலையில், சாலைகள் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. முகமது இர்பான் தனது நண்பர்களுடன் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்து விட்டு, மீண்டும் ஸ்கூட்டரில் அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். பாலாஜி பவன் எதிரே பென்சனர் காம்பவுண்டு சாலையில் இவர்கள் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த போது, இவர்கள் 3 பேரையும் பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், ஸ்கூட்டரை முந்திச் சென்று வழிமறித்து நிறுத்தினர். 

கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்த முகமது மீரான் அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்களைத் தடுக்க முற்பட்ட முகமது அப்துல்லாவுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து முகமது இர்பானின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து சாவகாசமாக தப்பிச் சென்றனர். 

ஆம்புலன்ஸ் கொலை மருத்துவமனை

படுகாயமடைந்த முகமது அப்துல்லா ரோட்டில் விழுந்து வலியால் அலறி துடித்துக் கொண்டிருந்தார். அப்துல்லாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிசையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று முகமது இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தில் கிடந்த முகமது இர்பான் ஓட்டி சென்ற ஸ்கூட்டர், கொலையாளிகள் விட்டுச் சென்ற பட்டா கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் 2வது, 8வது குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. 

இந்த கொலை பழிக்கு பழியாக அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கத்தியால் தலையில் வெட்டப்படுள்ள முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலையை கொடூரமாக சிதைத்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web