இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!

இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 14 ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!

இந்நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • இதன்படி தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம். தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!
  • நாளை முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம். தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி
  • அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி
இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!
  • பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்) – இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி
இன்று முதல் இந்த 27 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்! ஒரு பார்வை!
  • கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி (கட்டுமான பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது)
  • பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
From around the web