மெட்ரோ பயணத்தில் புதிய மாற்றம்: 17 புதிய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகள்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மேலும் நவீனமயமாக்கப்படுகிறது. அதில் இரண்டாம் கட்டத்துக்குள் அடங்கும் வழித்தடம்-3 திட்டத்தில், 17 புதிய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த பணியை Bridge and Roof Company Limited நிறுவனம் மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.250.47 கோடி என அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய கட்டமைப்புகள் நேருநகர், துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், கந்தன்சாவடி, பெருங்குடி, PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் உட்பட உயர் நிலை மெட்ரோ நிலையங்களில் உருவாக்கப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிவில் கட்டுமான பணிகள், நிலையங்களின் வடிவமைப்பு, அலங்காரம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் அனைத்தும் செய்யப்படவுள்ளன.
மேலும், மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் போன்ற போக்குவரத்து மையப்படுத்திய சொத்து மேம்பாட்டுத் திட்டங்கள் (Transit Oriented Development - TOD) உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை மெட்ரோ நிறுவனம் பயணச்சீட்டு வருவாயைத் தவிர்க்காமல் கூடுதல் நிதி வருவாயை ஈட்டும் வாய்ப்பையும் பெறும் எதிர்பார்ப்பு உள்ளது. ஒப்பந்த கையெழுத்து விழாவில் சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் Bridge and Roof நிறுவன பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
