அக்டோபர் 27ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் ” மொந்தா”!
வங்கக்கடலில் இந்த வார தொடக்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வலுவிழந்து மறைந்தது. அந்த தாழ்வுப் பகுதி நிலப்பரப்பிற்கு அருகில் உருவானதால் மண்டலமாக வலுப்பெறாமல் அழிந்தது. ஆனால் தற்போது, வங்கக்கடலில் நிலப்பரப்பிற்கு தொலைவில் புதிய தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால், அது புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு தாய்லாந்து பரிந்துரைத்த “மொந்தா” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல்கள் தெளிவாக பரவ வேண்டும் என்பதற்காக புயல்களுக்கு தனித்த பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்கள் குறியீடுகளைக் காட்டிலும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியவையாக இருப்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள் தலா நான்கு பெயர்களை பரிந்துரிக்கின்றன. இவை ஆங்கில அகரவரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன; ஒரே பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாது. அந்த வரிசையில் தாய்லாந்து பரிந்துரைத்த “மொந்தா” தற்போது பயன்படுத்தப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் அக்டோபர் 27ஆம் தேதி ஆந்திரா கடலோரத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
