ஆம்புலன்ஸை ட்ராக் செய்ய புதிய வசதி.. செல்போன் செயலி விரைவில் அறிமுகம்!

 
ஆம்புலன்ஸ்

108 ஆம்புலன்ஸ் சேவையை நாடுவோர் தங்கள் ஆம்புலன்ஸ்கள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய உதவும் செயலி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ்களை இயக்கும் EMRI GREEN HEALTH SERVICES, GVK ENTERPRISES, தற்போது ஒரு செயலியை சோதனை செய்து வருகிறது.

ஆம்புலன்ஸ்

ஒரு பயனருக்கு ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டதும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தொடர்பு எண் மற்றும் ஆம்புலன்ஸ் எங்குள்ளது என்பதைக் கண்டறிய இணைய இணைப்பு அவரது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதேபோல், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பயனரின் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் இணைய இணைப்பும் அனுப்பப்படும்.

ஆம்புலன்ஸ்

இதனால் ஆம்புலன்சுக்காக பயனர்கள் காத்திருக்கும் நேரமும், ஓட்டுனருக்கு தேவையற்ற  அலைச்சல்களில் இருந்தும்   காப்பாற்றும். கடந்த சில மாதங்களாக சோதனை முறையில் இருக்கும் இந்த ஆப் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web