நூலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !

 
நூலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது கொரோனா தடுப்பு முறைகள் , அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பொதுநூலக இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நூலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !


வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நூல்கள் இவற்றை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். நோய் பரவல் அதிகம் உள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நூலகங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது.


நூலகத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே நூலகத்திற்குள் நுழைய அனுமதி.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் வெப்பமானி கொண்டு சோதித்த பின்பே நூலகத்திற்குள் நுழைய அனுமதி.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களும் கட்டாயம் அலுவலகப் பணி நேரங்களிலும், பயண நேரங்களிலும் அடையாள அட்டை அணிய வேண்டும்.

நூலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !


குளிர்சாதன வசதி உள்ள நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எந்தெந்த பிரிவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் வைத்திருக்க வேண்டும்.
நூலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், சிகிச்சையகங்களைக் கண்டறிந்து அதற்கான விவரங்களை பட்டியலிட்டு நூலகத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மாவட்ட நூலக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தொடர்புக் கொண்டு வாரம் ஒருமுறை, நூலகம் மற்றும் நூலக வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி நூல்கள் பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவுகளை பயன்படுத்தும் வாசகர்கள், இப்பிரிவில் உரிய சமூக இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வண்ணம், இருக்கைகளை உரிய இடைவெளி விட்டு அமைத்தல் வேண்டும்.
மேலும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மிகாமல் மட்டுமே அமைத்தல் வேண்டும். மற்ற இருக்கைகளை இப்பிரிவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.


வாசகர்கள் கோரும் குறிப்புதவி நூல்களை, நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வேளையில் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவிற்கு ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாசகர் வரும் வேளைகளில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

சொந்த நூல்கள் படிக்கும் பிரிவை பயன்படுத்தும் வாசகர்கள் எடுத்து வரும் நூல்கள், மடிக்கணினி, மற்றும் இதர பொருட்களை சார்ந்த வாசகர்களை தவிர வேறு வாசகர்களுடன் பகிர அனுமதிக்க கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது. நூலகங்கள், 75 நாட்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web