வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு... தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என கூறப்பட்ட நிலையில், இப்போது அது தென்மேற்கு பகுதியில் உருவாகி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 36 மணி நேரத்தில் இது தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று (அக். 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!