தண்ணீர், மேகத்துடன் புதிய கிரகம்!விஞ்ஞானிகள் அசத்தல்!

 
தண்ணீர், மேகத்துடன் புதிய கிரகம்!விஞ்ஞானிகள் அசத்தல்!

வானப் பெருவெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. பால்வெளி வீதியில் சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் ‘டிஓஐ 1231 பி’ என்கிற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த கிரகம் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது எனவும், நெப்டியூன் கிரகத்தின் மறு உருவம் எனவும் உறுதி செய்துள்ளது. இந்த கிரகத்தில் உள்ள் சிறப்பான அம்சம் என்னவெனில் இங்கும் பூமியைப் போலவே தண்ணீர் மற்றும் மேகங்கள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், மேகத்துடன் புதிய கிரகம்!விஞ்ஞானிகள் அசத்தல்!

ரெட் டுவார்ஃப் எனப்படும் சிவப்பு குள்ளன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. . சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்துக்கு சூரியனைவிட வயது அதிகம். சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதியே குளுமையானது என்பதால் இந்த புதிய கிரகமும் அதிக குளுமை நிறைந்தது. இந்த கிரகத்தின் தட்பவெட்பம் அறிய பார்கோட் மூலம் அறியப்படுகிறது.

மேலும் இந்த கிரகத்தில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்கி போல சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கிரகத்தை காண முடியும். தென் கலிபோர்னியா மாகாணத்தில் நாசா விஞ்ஞானி டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் டிஓஐ 1231 பி கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web