மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சேவை ! குவியும் பாராட்டுக்கள்!

 
மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சேவை ! குவியும் பாராட்டுக்கள்!


கரூர் மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் நகரின் முக்கியப் பகுதியில் இருந்து தான்தோன்றிமலை என்ற பகுதியில் சுமார் 6 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமைந்துள்ளது.இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சேவை ! குவியும் பாராட்டுக்கள்!


அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்டோவை ஏற்பாடு செய்துள்ளார்.
அவர்களை பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் வரை அழைத்து செல்வதற்காக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சேவை ! குவியும் பாராட்டுக்கள்!

இனி வாரம்தோறும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web