புத்தாண்டு கொண்டாட்டம்... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்!
இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுவின் மூத்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து முதல்வரிடம் புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திமுக தலைவர்களும், தொண்டர்களும் ஜனவரி 1ம் தேதி சந்தித்து வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அவரும் சளைக்காமல், சோர்வடையாமல் தொண்டர்களை ஜனவரி 1ம் தேதி சந்திப்பதை வழக்கமாக கடைபிடித்து வந்தார்.
அந்த வகையில் இன்று ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு திமுகவின் மூத்த அமைச்சர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு,பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!