கல்யாணமாகி 4 வது நாளில் தங்கையின் கணவருடன் ஓடிய புதுமணப்பெண்!

 
கோவை
 

கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த 40 வயது சந்திரன் (பெயர் மாற்றம்) ஒன்பது மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருமணம்

சமீபத்தில், சந்திரனின் மனைவி தனது தங்கைக்கு (32) மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்தார். நீலாம்பூரில் உள்ள கோவிலில் சில நாட்களுக்கு முன்பு அந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்தின் நான்காவது நாளிலேயே புதுப்பெண் திடீரென காணாமல் போனார்.

மணமகன் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய சூலூர் போலீசார், புதுப்பெண் மற்றும் சந்திரன் இருவரின் மொபைல் டவர்களை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் நெருக்கம் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

5வது திருமணம்

சந்திரனின் மனைவி இதை அறிந்ததும் அவசரமாக தங்கைக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், புதுப்பெண் தனது அக்கா கணவரை மறக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடியதாகவும் போலீசார் கூறினர்.இருவரையும் போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!