அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு அலெர்ட்... எச்சரிக்கையா இருங்க மக்களே!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடுட்டுள்ள செய்திக்குறிப்பில் “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஆகஸ்ட் 1ம் தேதி வியாழக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் ஆகஸ்ட் 3ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் . அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!