நாம் தமிழர் கட்சியில் அடுத்த அதிர்ச்சி... சீர்காழியில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற செயலாளர் ஜவகர் நெடுஞ்செழியன் தலைமையில் நகர செயலாளர் நகர பொறுப்பாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்ததால் அக்கட்சியிலிருந்து விலகி மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வந்த பொறுப்பாளர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அதிமுகவில் சிறப்பாக பொதுமக்களுக்கு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!