நீலகிரி கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி கலெக்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளது.
வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது சென்னை ஐகோர்ட்டு இதற்கான கண்டனம் தெரிவித்தது. நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, குடிநீர் விநியோக மையங்கள் போன்றவை செயல்படவில்லை எனவும், பிளாஸ்டிக் குறித்து எந்த பரிசோதனைகளும் நடத்தப்படுவதில்லை, இ-பாஸ் நடைமுறை, முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 4ம் தேதி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!