கேட்பாரற்று கிடந்த பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா.. போலீசார் அதிரடியாக பறிமுதல்!

 
 கஞ்சா கடத்தல்

கோவை குற்றத்தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவு போலீசார் மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ​​கோர்பா-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற பிறகு, பிளாட்பாரத்தில் இருந்து ஒரு பை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் பையை சோதனை செய்தபோது, ​​அதில்  ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, அசாமில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா

கடந்த வாரம் அசாமின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வழியாக கோவைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை ரயில் நிலையத்தில் தொடர் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web