ஆதாரமில்லை... கடவுளை வைத்து அரசியல் செய்யாதீங்க... திருப்பதி லட்டு சர்ச்சையில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

 
ஆதாரமில்லை... கடவுளை வைத்து அரசியல் செய்யாதீங்க... திருப்பதி லட்டு சர்ச்சையில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

கடந்த சில தினங்களாக திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக மிக குறைந்த விலைக்கு நெய்  கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதனால் லட்டு தரம் குறைந்து போனதாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது.  

ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு அரசு பொறுப்பேற்று முதல்வரான பிறகு , திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தைப் பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். 

திருப்பதி லட்டு

குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் திருப்பதியில் லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவராகம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் விசாரணைகள் முழுவதுமாக முடிவடையாமல் இருக்கும் போதே ஏன் இத்தனை அவசரமாக ஆந்திர முதல்வர் இது குறித்து பொதுவெளியில் பேசியது ஏன்? என கேள்வி  எழுப்பியுள்ளனர்.  

திருப்பதி லட்டு

அதே சமயம் முதல்வர் சந்திர பாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும், அரசியல் அமைப்பு சட்டப்படியான பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.  

சர்ச்சைக்குரிய நெய் தான் திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.  திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்டது கலப்பட நெய் என்பதற்கு ஆதாரம் எங்கே? திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்? ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா? என்றும் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web