’தைவான் இணைவதை யாராலும் தடுக்க முடியாது’.. பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சீன அதிபர்!

 
அதிபர்  ஜின்பிங்

தைவான் தென் சீனக் கடலில் உள்ள ஒரு சிறிய தீவு. எனினும் தைவான் தனி நாடு இல்லை என்றும் அது சீனாவின் ஒரு பகுதி என்றும் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இதை தைவான் அரசு முற்றிலும் எதிர்க்கிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ் ஒரு பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா போர் ஒத்திகைகளில் ஈடுபடுவது வழக்கம்.
தைவான்

இதனால் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் தைவானை கைப்பற்ற சீனா முப்படைகளுடன் போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த தைவான், “சீனா தனது எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. நிலைமையை கண்காணித்து வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவோம்” என்றார்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில், “தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீன மக்களாகிய நாங்கள் ஒரே குடும்பம். தைவான் சீனாவுடன் மீண்டும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இது அந்த நாட்டுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web