வேறு யாருமே செய்யலை.... வரலாற்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின் இடம் பிடித்த விஜய்!

 
ஜெயலலிதா விஜய் ஜெயலலிதா விஜய்

தமிழக அரசியல் களம் எப்போதுமே பல்வேறு சுவாரசியங்களுக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் பெயர் பெற்றது. பொதுவாக, ஒரு கட்சியின் மிக முக்கியத் தலைவர்கள் அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர்கள், தங்களது வெற்றியை உறுதி செய்யவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் ஒரே பொதுத்தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து களம் கண்ட வரலாற்றுப் பின்னணிகளைப் பார்க்கலாம் வாங்க. 

தமிழக தேர்தல் வரலாற்றில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மிகவும் உற்றுநோக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது. அத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் அதிரடியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார்.

முதல்வர் விஜய்

இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்ற விதிமுறை இருந்தது. மேலும், ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையைக் காரணம்காட்டி, அவரது நான்கு வேட்புமனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் அதிரடியாக நிராகரிக்கப்பட்டன.

ஆனாலும் அத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாமலேயே, ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். பின்னர் நீதிமன்ற உத்தரவால் பதவியிறங்கி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் 2002-ல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சரானார்.

ஜெயலலிதா ஓபிஎஸ்

இதற்கு முன்னதாக, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலுமே அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். பின்னர், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் தொகுதி மூலம் தமிழகத்தின் முதலமைச்சராகத் தனது முதல் ஆட்சிக்காலத்தைத் தொடங்கினார்.

இதேபோல், அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள், 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இறுதியாக, அவர் மதுரை மேற்குத் தொகுதியில் அதிகாரப்பூர்வமாகக் களம் கண்டு, மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் அரியணை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.