இளையராஜாவை அவன், இவன்ன்னு விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை.. நடிகர் விஷால் ஆவேசம்!

 
விஷால்

சென்னை கொளத்தூரில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நடிகர் விஷால் சந்தித்து உரையாடினார்.  அந்த இல்லத்தில்  குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்களிடம்  உங்களது படிப்பிற்கு பிச்சையும் எடுக்கநான் தயார், யாரும் குறை சொல்வதை கேட்காதீர்கள், எப்போதும் சிரித்து கொண்டே இருங்கள் எனக் கூறினார்.  

மிஷ்கின் விஷால்

அவர் நடித்த படத்தின் பாடல்களை குழந்தைகள் பாடியதை கேட்ட விஷால் கைகளை தட்டினார்.  இது குறித்து விஷால் “ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒதுக்க கூடாது. நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்த தொகையில் ரூ 10 லட்சம்  இந்த மையத்திற்கு வழங்கினோம். 3 வேளை சாப்பாட்டிற்கு நான் உதவி செய்தேன். யாருக்கும் யாரும் இல்லையென யாரும் சொல்ல கூடாது. தமிழக காவல் துறையின் பணி சிறப்பானது, போதை பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கைது செய்தாலும் அதை மீறி சில விஷயங்கள் நடந்து விடுகிறது  . இசையமைப்பாளர் இளையராஜாவை அவன், இவன் என்று மேடையில் விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

விஷால்

மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு. தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார். சில பேருடைய சுபாவத்தை மாற்ற முடியாது. 2026  தமிழக சட்டப்பேரவை தேர்தல் தனி திரையரங்கமாக போன்று இல்லாமல் மல்டிப்பிளக்ஸ் போன்ற பல முனையாக இருக்கும். நடிகர் விஜய்யின் அரசியலை வரவேற்கிறேன், 70 ஆண்டுகளுக்கு இன்னும் தண்ணீர் உட்பட பல  அடிப்படை வசதிகள் இல்லை. ஆகையால் நடிகர் விஜய்யின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web