இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என கூறக்கூடாது... உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

 
இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என கூறக்கூடாது... உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது' என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார்.

அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி, வேதவியாசாச்சர் ஸ்ரீஷானந்தா விசாரித்தார். அப்போது அவர், பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது.

மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி ஸ்ரீஷானந்தாவை உச்சநீதிமன்ற  நீதிபதி சந்திரசூட் கண்டித்தார். 

தண்டனை வழங்கிய நீதிபதி மீது செருப்பு வீச்சு! கோர்ட்டில் பரபரப்பு!

இந்நிலையில், நேற்று செப்டம்பர் 25ம் தேதி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது கர்நாடகா நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது. நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் மற்றும் அவதூறு கருத்துகளை கூறக்கூடாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web