பீகார் தேர்தல்... இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!
2025 ம் ஆண்டுக்கான பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் இப்போது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் பேரில், முதல் கட்ட வேட்புமனுத் தாக்கல் இன்று, அக்டோபர் 10ம் தேதி தொடங்கியுள்ளது.
தேர்தல் கால அட்டவணை:
முதல் கட்ட வாக்குப்பதிவு: நவம்பர் 6 – 121 தொகுதிகள்
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: நவம்பர் 11 – 122 தொகுதிகள்
வாக்கு எண்ணிக்கை: நவம்பர் 14

வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்: அக்டோபர் 10
கடைசி நாள்: அக்டோபர் 17
ஆவண பரிசீலனை: அக்டோபர் 18
மனு திரும்பப்பெற கடைசி நாள்: அக்டோபர் 20
முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் பகுதிகள்
பாட்னா, தர்பங்கா, சஹர்சா, மாதேபுரா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், முங்கர், ஷேக்புரா, நாளந்தா, பக்சர், போஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும்.

பீகார் மாநிலத் தேர்தல் கணக்குகள்:
மொத்த தொகுதிகள்: 243
38 தொகுதிகள் – நடுத்தர சாதிக்கான ஒதுக்கீடு
2 தொகுதிகள் – பழங்குடியினருக்கான ஒதுக்கீடு
மொத்த வாக்காளர்கள்: 7.43 கோடி
ஆண்கள்: 3.92 கோடி
பெண்கள்: 3.50 கோடி
மூன்றாம் பாலினம்: 1,725 பேர்
வாக்குச்சாவடிகள்: 90,712
தேர்தல் பொறுப்பாளர்கள்:
243 தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
