’மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்'.. சாமியார் பேச்சால் வெடித்த சர்ச்சை!

 
மஹந்த் ரவீந்திர புரி

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்துக்கள் அல்லாதவர்கள் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 மகா கும்பமேளா

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைப் பாதுகாக்க, இந்துக்கள் அல்லாதவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அவர்கள் கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு கடை வைக்க அனுமதி வழங்கினால், எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

முன்னதாக, ‘மனிதனின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமைக்கு கும்பமேளா ஒரு எடுத்துக்காட்டு என்றும், இந்த நிகழ்வில் பாரபட்சம் இருக்காது என்றும், அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில்  ரவீந்திர குருவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web