வடசென்னை வளர்ந்த சென்னையாக மாறும்.... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

 
முதல்வர் ஸ்டாலின்


 
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து மக்களிடையே உரையாற்றினார்.  அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர்  கலந்து கொண்டனர்.இதனையடுத்து முதல்வர் ஆற்றிய உரையில்  ” வடசென்னை வளர்ந்த சென்னையாக இருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ஸ்டாலின் ஆளுநர்

மேயர் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவரைப்போல அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டுக்குள் திட்டங்கள் அனைத்தையும் முடிக்கவேண்டும் என உத்தரவுப் போட்டிருக்கிறேன். வடச்சென்னை ஓராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும்.சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வருகின்றன” என  மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் ரவி

மேலும் அவர்  ” ஆளுநர் ரவி எல்லா பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது. அவர் அப்படியே செயல்படட்டும். அது ஒரு வகையில் எங்களுக்கு நல்லது என்றுதான் நினைக்கிறேன். அவர் அதை செய்ய செய்யதான், எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் ‘வேகம்’ வருகிறது. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனவும் பேசினார். அதன்பிறகு பெரியார் பற்றிய விவகாரம் குறித்து  மு.க.ஸ்டாலின் ” பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க நாங்கள் விரும்புவது இல்லை” எனவும் பேசிவிட்டு சென்றுள்ளார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web