வைரல் வீடியோ... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

 
வடகொரியா

  
வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.  கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. வடகொரியா  தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் அடிக்கடி  ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்குமுன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.

வடகொரியா

 இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 1 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணித்து வடகிழக்கு கடல் பகுதியில் விழுந்தது. 2025ம் ஆண்டு வடகொரியா நடத்திய முதல் ஏவுகணை சோதனை இதுவாக பார்க்கப்படுகிறது.  இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web