வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தி மையத்தில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு!

வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்தார்.
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும், தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!