கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்.. பெண் உட்பட 3 பேர் கைது.. 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
பிஸ்ரபா பல்வர்சிங் - சந்தன் பலியார்சிங் - அஞ்சனா டிகல்

சென்னை பல்லாவரம், பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம் பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியை கண்காணித்தபோது, ​​சந்தேகப்படும்படியாக வட மாநிலத்தை சேர்ந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிஸ்ரபா பல்வர்சிங் (26), சந்தன் பலியார்சிங் (27), அஞ்சனா டிகல் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஒடிசா மாநிலம் பள்ளிகொண்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web