குட் நியூஸ்... குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய மொத்தம் 9491 பணி இடங்களுக்கான குரூப் 4 போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 15,88,1684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்பட்டது.குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு 2024 நவம்பர் மாதம் 28ம் தேதி டி.என்.பி.எஸ்.சி, 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குரூப் 4 ல் கூடுதலாக 41 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனுடன் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!