தடகள போட்டியில் தங்கம் வென்ற கன்னியாஸ்திரி... 55 வயதிலும் மின்னிய சாதனை!

 
கன்னியாஸ்திரி

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சபீனா (55), மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தடை தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

துவாரகா ஏ.யு.பி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சபீனா, 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று மின்னல் வேகத்தில் ஓடி மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளினார். இதன் மூலம் தங்கத்தை கைப்பற்றிய அவர், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

தேசிய தடகள சாம்பியஷிப் போட்டி

சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம்கொண்ட சபீனா, 9ஆம் வகுப்பில் இருந்தபோதிலேயே தேசிய அளவிலான தடைதாண்டும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த ஆண்டு ஓய்வு பெறவிருப்பதால், இறுதியாக ஒருமுறை தடகள அரங்கில் களம் காண வேண்டும் என்ற ஆசையுடன் இந்த போட்டியில் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

சபீனாவின் இந்த வெற்றி, வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதையும், மன உறுதியும் பயிற்சியும் இருந்தால் எப்போதும் வெற்றியைப் பெற முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?