அட... அசத்தல் வீடியோ... பாத்திரம் கழுவி, சப்பாத்தி போடும் குரங்கு... !

 
குரங்கு


சாதாரணமாக வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்தாலே குரங்கு மாதிரி விஷமம் செய்யாதே எனக் கூறுவர். அவை தான் ஓரிடத்தில் நிற்காமல் மரத்துக்கு மரம் தாவித்திரியும். கையில் ஏதாவது பொருள் வைத்திருந்தால் உடனே பறித்து கீழே போட்டு விடும். இப்படி இருக்கையில் ஒரு குரங்கை வீட்டு வேலைக்கு பழக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒன்று  அனைத்து வகையான வீட்டு வேலைகளையும் செய்கிறது.

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சத்வா கிராமத்தில்  வசித்து வருபவர் விஸ்வநாத். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். அவர் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குரங்கு பாத்திரம் கழுவுகிறது சப்பாத்தி மாவு தேய்த்து சப்பாத்தி போடுகிறது.

அந்த குரங்கு விஸ்வநாதன் மனைவியான ராணியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறது. இதனை அவருடைய மகன் ஆகாஷ் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.   இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web