அதிகாரப்பூர்வ அறிவிப்பு... நாளை முதல் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்!
இனி வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 9ம் தேதி முதல் நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 செப்டம்பர் முதல் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 'வந்தே பாரத்' ரெயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்த நிலையில், கோவில்பட்டியில் நின்று செல்ல அனுமதிக்குமாறு பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது கோவில்பட்டியிலும் 'வந்தே பாரத்' ரெயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருமார்க்கத்திலும் செல்லும் 'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கான உத்தரவு முறைப்படி தெற்கு ரெயில்வே விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் நாளை முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும். காலை 6.05 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில்நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து புறப்படும் ரெயில் இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
