அரைநிர்வாணமாக தெறித்து ஓடிய அதிமுக நிர்வாகி... உல்லாசத்திற்குப் பின் பணம் தராததால் உதைத்த இளம்பெண்!
உல்லாசம் அனுபவித்த பிறகு பேசியபடி பணம் தராததால் அதிமுக நிர்வாகியை கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் வெளுத்து வாங்கியதில், சட்டையெல்லாம் கிழிந்தபடி அரைநிர்வாண கோலத்தில் நிர்வாகி தலைதெறிக்க ஓடிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் அதிமுக மூத்த பிரமுகர். அவருக்கு கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண்களுடன் தொடர்பு உள்ளது.
ஒரு கட்டத்தில், கேரளாவில் இருந்து அடிக்கடி வரவழைத்து பெண்ணுடன் நிர்வாகி உல்லாசமாக இருந்துள்ளார். இவரது குடோன் ஒன்று நாகர்கோவிலில் உள்ளது. இங்கு பந்தல் பொருட்களை வைத்துள்ளார். இந்த குடோனை அ.தி.மு.க., நிர்வாகி தனது "லாட்ஜ்' ஆக பயன்படுத்தி வருகிறார்.
இந்த குடோனுக்கு கேரள பெண்ணை வரவழைத்து சில நாட்கள் வைத்து உல்லாசமாக இருப்பது வழக்கம். பின்னர் அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்து கேரளாவிற்கு திருப்பி அனுப்புவார். எனவே, சமீபத்தில் நிர்வாகி பெண்ணை அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் தங்கி உல்லாசமாக இருந்தார். ஆனால் இம்முறை பணம் வழங்கப்படவில்லை.
இதனால், இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதுமட்டுமின்றி, கேரள பெண்ணை தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு அதிமுக நிர்வாகி வற்புறுத்தியுள்ளார். அந்த நண்பர்கள் அனைவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி அந்த பெண்ணை தாக்கினார்.
ஏற்கனவே பணம் தராததால் கோபத்தில் இருந்த பெண், "என்னை அடிக்கிறீங்களா?" என்று கேட்டு பதிலுக்கு நிர்வாகியை தாக்கினார். அதிமுக நிர்வாகியை ஆவேசமாக தாக்கி, சட்டை மற்றும் லுங்கியை கழற்றினர். அடி தாங்க முடியாமல், நிர்வாகி வீட்டுக்குள் ஓடினார். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!