அடேங்கப்பா.. 3,600 ஆண்டுகள் பழமையான சீஸ் கண்டுபிடிப்பு.. வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள்!
சீனாவில் 3,600 ஆண்டுகள் பழமையான சீஸ் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாலாடைக்கட்டி பழங்காலத்தில் மம்மிகளின் தலை மற்றும் கழுத்தில் தடவப்பட்டுள்ளது. டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் பசு மற்றும் ஆடு பாலில் இருந்து இந்த சீஸ் தயாரிக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த பாலாடைக்கட்டி ஒரு புரோபயாடிக் சீஸ் ஆகும், அதாவது இது ஆரோக்கியமான பாக்டீரியாவுடன் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மம்மிகளின் உடலில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான வெள்ளைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் அடிப்படை துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை.
சமீபத்திய டிஎன்ஏ ஆய்வு இது ஒரு பழங்கால சீஸ் என்பதை உறுதிப்படுத்தியது. ஆராய்ச்சியாளர் ஜியாமி ஃபூவின் கூற்றுப்படி, இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சீஸ் மாதிரிகளில் மிகப் பழமையானது. இந்த கண்டுபிடிப்பு, பழங்காலத்தில் சீஸ் தயாரிக்கும் முறைகள், உணவுப் பழக்கம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய நுணுக்கமான புரிதலை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!