’ஓ மை கடவுளே பட பாணியில் ஷாக் சம்பவம்'.. விவாகரத்து கேட்ட மனைவியை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்!
லீ மற்றும் சென் சீனாவில் திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதைப் பொறுக்க முடியாத மனைவி சென், ஒருநாள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கணவர் தன்னுடன் தொடர்ந்து சண்டையிட்டு துன்புறுத்தியதாகவும், தங்களுக்கு விரைவில் விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘கணவன் மனைவி இருவரையும் சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதா? என்று கேட்டுள்ளனர்.
இதற்கு கணவன் விவாகரத்து வேண்டாம் என்றும், மனைவி விவாகரத்து வேண்டும் என்றும் கூறியுள்ளார். விசாரணையின் ஒரு கட்டத்தில், மனைவி தன்னை விட்டுப் பிரிந்து விடுவாள் என்று எண்ணிய கணவன், அலேக்காக மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டத்தில் நீதிமன்றத்தை விட்டு ஓடினார். சென் அலறியதால், அதிகாரிகள் லீயைப் பிடித்தனர்.
இதைப் பார்த்த நீதிபதி, உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று லீயிடம் கூறியதோடு, இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது என்று எச்சரித்தார். மன்னிப்பு கடிதம் எழுதவும் உத்தரவிட்டார். அவர் எழுதிய கடிதத்தில், லீ, “எனது தவறின் தீவிரத்தையும் அதன் எதிர்மறையான தாக்கத்தையும் இப்போது உணர்கிறேன். எதிர்காலத்தில் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து கணவன்-மனைவி இடையே பந்தம் நீடித்துள்ளதாகக் கூறி வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். தமிழ் சினிமாவில் 'ஓ மை காட்' படத்தின் க்ளைமாக்ஸில் இப்படியொரு காட்சி வருவதால், இது நம் ரசிகர்களுக்குப் பரிச்சயமான ஒரு சுவாரஸ்யமான காட்சி! அங்கே விஜய் சேதுபதி அசோக் செல்வனுக்கு வாய்ப்பு கொடுப்பார்... இதோ இங்கே நீதிபதி கொடுத்திருக்கிறார்..
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!